மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 31 மே, 2014

இது அவசியமா?

                        ”திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்” , ”திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது”, ”வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்”
என்று திருமணத்திற்காக வழங்கப்படும் சொல்வழக்குகள் ஏராளம் ஏராளம்.....


                           திருமணம் என்பது இருமனங்கள் ஒன்று சேரும் ஒரு நல்ல நிகழ்வாகும். நமது முன்னோர்களின் திருமண முறைக்கும் தற்போது நடைமுறையில் உள்ள முறைக்கும் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது, அனைவரும் அறிந்ததே..

                             நமது முன்னவர்கள் இந்த   பெண்ணுக்கு இந்த பையன், இந்த பையனுக்கு இந்த பொண்ணு என்று பெரியவர்களால் முடிவுசெய்யபட்டு ஒரே நாள்    இரவில் திருமணம் முடிந்த காலமெல்லாம் உண்டு. இன்னும் சொல்லப்போனால் பெண்ணும் மாப்பிள்ளையும் பார்த்துக்கொள்ளாமலேக் கூட திருமணங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. ஆனால் இன்று அப்படியல்ல. காலம் மிக வேகமாக ஓடுவதற்கு இணங்க நாமும் அதன் பின்னால் ஓடியாக வேண்டும்.

                             எனது ஆதங்கம் திருமணத்தின் மேல் அல்ல. இன்றைய பெரும்பாலான திருமணங்களில் இடம்பெறும் சில ஆடம்பர வைபங்கள் மேல்தான். இன்றைய திருமணங்களில் தனது அன்பை வெளிப்படுத்துவதாக  எண்ணிக்கொண்டு தனது செல்வாக்கையும் பந்தாவையும் காட்டத்தான் முனைகின்றன.

                                நான் இன்று (31-05-2014) மாலை ராஜவீதிக்கு சென்றிருந்தேன். பயங்கரமான  நெரிசல். மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக எப்போதும் இருக்கும் கூட்டத்தை விட இன்று சற்று அதிகமாகவே இருந்தது. திடீரென்று எங்கிருந்தோ கிளம்பியது வானவேடிக்கை,  ஏதுதளத்தில் இருந்து கிளம்பும் ஏவுகணை போல.. பற்றாக்குறைக்கு தரையில் சரவெடி வேறு. வானத்தையும் தரையையும் வாயைப் பிளந்தவாறு வாகன ஓட்டிகள், நின்றவர்கள், நடந்தவர்கள், இருந்தவரகள் என்று பலரும் பார்த்துக்கொண்டு நின்றனர். ( இதில் நானும் ஒருத்தியாக இருந்திருப்பேன் என்று நான் சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கம் என்று நம்புகிறேன்).



                                சரவெடியின் பின்னால் ஒரே நிறத்தில் உடை அணிந்து (அ நேகமாக அது அவர்களின் யுனபாரமாக இருக்கணும்) வந்தவர்களில் சிலர் வாயில் எதையோ வைத்து பீபீபீ என்று ஊத, சிலர் கையில் எதையோ பெரிதாகத் தொங்கவிட்டு டொம்டொம் என்று சமீபத்தில் வந்த ஏதோ பாடலை வாசித்து வர, அவர்களுக்கு இணையாக ஏதோ வேடம் போட்டு (இந்த வெயிலிலும் இவர் அணிந்திருந்த ஆடையைப் பார்க்கையில் இவரை பாராட்டாமால் இருக்க முடியவில்லை)   நடக்கமுடியாமல் ஆடிக்கொண்டு வந்தார்.

                                  இவர்களுக்கு பின்னால் ஒரு பெருங்கூட்டம் நடந்து வர கடைசியாக ஒரு ஊர்வல மேடையில் மணமகனும் மணமகளும் இணைந்து உட்கார்ந்து கொண்டு தம்மை ஊரே பார்க்கிறது என்ற நினைப்பெல்லாம் ஏதும் இன்றி ஸ்வாரஸ்யமாக எதையோப் பேசிக் கொண்டு வந்தனர். மாப்பிள்ளையையும் பெண்ணையும் இப்படிக் காட்சிப்பொருளாக்குவது சரிதானா?

                                 இத்தனையையும் கடந்து சென்று மறைவதற்குள் மீண்டும் வேறு எதோ திருமணத்தின் ஊர்வலம் வந்துவிட்டது.கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தேன். அப்பப்பாாாா தாங்கமுடியவில்லை. திருமணத்தின் போது வைக்கப்படும் சடங்குகள் அவரவர்கள் சொந்த விருப்பம். இருப்பினும் பொதுமக்களுக்கு இடையுறுத் தராமல் செய்யலாம் அல்லவா?  


(இது எனது முதல் கட்டுரை. என்னைத் திருத்திக்கொள்ள ஏதேனும் பிழையிருப்பின் குறிப்பிடவும்)

           












13 கருத்துகள்:

  1. அன்பின் தோழிக்கு வணக்கம்
    மிக நேர்த்தியாக சொல்ல வந்த விடயத்தைச் சொல்லி விட்டீர்கள். இது போன்ற செயல்கள் தம்மை இந்த சமூகத்தில் உயர்ந்தவராக காட்டிக் கொள்வதற்காக தான். எத்தனையோ ஏழைக் குடும்பங்களில் திருமணம் செய்ய வசதியின்றி முதிர்கன்னிகள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். அவர்களின் பார்வை மிகவும் குறுகியது. இந்த சமூகத்தில் நான் உயர்ந்தவன் என்பதை சாலையை மறித்துத் தான் சொல்வார்கள் அப்ப தானே நம்மைப் போன்றவர்கள் பார்ப்போம் என்பதற்காக!. இது போன்ற சமூகத்தில் வேறூன்றிக் கிடக்கும் அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள். பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  2. நன்றி தோழரே.. உங்கனைப் போன்றரோரி்ன் ஊக்கத்தால் எனது எழுத்து இன்னும் தொடரும்...நன்றி...

    பதிலளிநீக்கு
  3. சிந்தனை அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சார். இணையத் தமிழ்ப்பயிற்சியில் தாங்கள் கூறிய செய்திகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி சார்..

    பதிலளிநீக்கு
  5. திருமணம் அவசியம் என்பதை மறந்து திருமணம் அதிசயம் என்பதை காட்ட முன் நிற்கிறாரகள் பலர் இச்சமூகத்தில்.....அவர்களின் செயலை உணரும் விதத்தில் இக்கருத்தை வெளியிட்ட என் தோழிக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  6. என் வலைப்பக்கத்திற்கு வருக தோழியே.. எனது பகிர்வைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி தோழி...

    பதிலளிநீக்கு
  7. அனுபவப் பகிர்வு அருமை அம்மா ! இயல்பான நடையில் சிறப்பாக பதிவு செய்திருக்கிறீர்கள். புறச்சூழலைப் பற்றிய சமூகப் பார்வை மிக அருமை. ஆயினும் அச் சூழலின் அகச் சூழலையும் சற்று பார்க்க வேண்டுமம்மா ! மாப்பிளை வீட்டாரின் அரசத்தனம் அடங்க வேண்டும் அம்மா. மணக்கொடை, திருமணச் செலவு என்று பெண்வீட்டார் படும் அவதி சமூகத்தில் மாற வேண்டும். இரு வீட்டாருமே தம் பிள்ளைகளின் இல்லறம் செழிக்க சமப் பங்கீட்டை உள்வாங்க்கிக் கொள்ள வேண்டும். உங்களின் ஆதங்கம் கட்டாயம் புறச் சூழலை எளிமைப்படுத்தும். எளிமைப்படுத்துவது சூழலின் கட்டாயம் கூட ! மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள் ! குறீப்பாக செயமோகனுக்கு உங்களிடமிருந்து இன்னும் மறுப்பு வரவில்லை .

    பதிலளிநீக்கு
  8. முதல் பதிவுபோலத் தெரியவில்லை. நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் தோழி. தங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். பார்க்கவும். நன்ற்

    பதிலளிநீக்கு