மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 31 மே, 2014

எனது இந்தியா..

வீரத்தின் விளைநிலம்!
விவேகத்தின் பிறப்பிடம்!
கலைமகளின் கருவறை!

இயற்கையின் புகழிடம்!
இன்னும்,
எத்தனை எத்தனை மகுடங்கள்
இமயமெனும் எல்லை கொண்ட
நம் இந்தியாவுக்கு!




எல்லாம் என் பாட்டி சொன்ன
கதைகளாகிவிடுமோ
என்னும் அச்சம் என்னுள்..

ஆம்,
நாகரீகத்தின் தொட்டிலாம்
நம் நாட்டில்
இன்று,

அந்நிய நாகரீகம்
அநாகரீகமாய்
அம்பலமாகிறது!

புதுமையெனும் பேரில்
புயலாய் உருவெடுத்துள்ளது
கலாச்சார சீரழிவு!

விருந்தோம்பல் என்பதனை
புத்தக வரிகளில் மட்டுமே
படிப்பதற்கு அடையாளமாய்
வீதிகள் தோறும்
வயது வரம்பின்றி
பிச்சைக்காரர்கள் பட்டாளம்!

இன்றைய இளைய சமுதாயம்
பிறப்பது இ்ங்கே..
வளர்வது இங்கே..
படிப்பதும் இங்கே..
வருமானம் தேடுவது மட்டும்
அயல்நாட்டில்!

எங்கே போகிறது
இந்தியா?

இனி வரும் தலைமுறையே
நீயாவது புரிந்துகொள்!

உலக அரங்கில்
இந்தியாவின் புகழை
அரங்கேற்ற..

புதுமனிதனாய்ப் பிறந்திடு!!!!!!!!!!!!!!




4 கருத்துகள்:

  1. சமூக சிந்தனைகளைக் கவிதையாக்கி தந்த விதம் மிகவும் கவர்கிறது தோழியே! இன்றைய இளைஞர்களுக்கு அவசியமான சுட்டிக்காட்டல் ஒரு இளைஞரிடமிருந்து வந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அருமை. தங்கள் எண்ணங்கள் எழுத்துகளாக இங்கே தொடர்ந்து மிளிரட்டும். நன்றி..

    பதிலளிநீக்கு
  2. அப்படிப் போடு!
    இத இத இதத்தான் எதிர்பார்த்தேன் ரேவதி! கலக்கிட்டீங்க.
    அதிலும் -
    இன்றைய இளைய சமுதாயம்
    பிறப்பது இ்ங்கே..
    வளர்வது இங்கே..
    படிப்பதும் இங்கே..
    வருமானம் தேடுவது மட்டும்
    அயல்நாட்டில்!“ என்னும் வரிகள் ஈட்டிக் குத்து! அதில் வருமானம் தேடுவது மட்டுமல்ல, வேறொரு கோணத்தில் உழைப்பைக் கொடுப்பதும் அங்கல்லவா? இதைத்தான் BRAIN DRAIN என்கிறார்கள். பொருளாதாரச் சீரழிவு, கலாச்சாரச் சீரழிவு இரண்டையும் சுட்டிக்“கொட்டிய“ விதம் அருமை தொடரவும், தொடர்வேன்.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு