மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 19 நவம்பர், 2015

கடவுளைக் கண்டால்.....




         அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். கடவுளைக்கண்டால் தனது ஆசைகளாக என்னென்ன சொல்வாய் என்று கவிஞர் மாலதி அம்மா என்னிடம் கேட்டார்கள். கேட்டதோடு மட்டுமன்றி அதனை உனது வலைப்பக்கத்தில் எழுதவும் என்றும் கேட்டுக்கொண்டார்..அவரின் அன்புக்கு நான் அடிமை!!!! (சரி சரி ஃபீல் ப்ண்ணாதீங்க..புரியிது..புரியிது....)

          இதனைத் தொடங்கி வைத்த கில்லர்ஜி அண்ணாவுக்கு நன்றி... என்னை எழுத சொல்லி எப்போதும் ஊக்குவிக்கும் நிலவன் அ்பபாவுக்கு நன்றி... சரி ஆசைக்கு வருவோமா.......

           1. என் குழந்தைப் பருவ நிகழ்வுகளை  நானேப் பார்க்க வேண்டும்.
           2. என் பள்ளிப்பருவத் தோழிகளை மீண்டும் அதே பருவத்துடன் பார்க்க வேண்டும்
          3. அரசர்கள் ஆண்ட காலத்தினை நேரில் பார்க்க வேண்டும். (குறிப்பாக இராஜராஜசோழன் ஆட்சி)
          4. நான் விரும்பிய இடங்களுக்கச் சென்று  சுற்றித்திரிய வேண்டும்
          5. பிறரின் குறைகளைக் கருத்தில் கொள்ளாத மனம் வேண்டும்
          6.எ்ன்னால் முடிந்தவரை பசியில் உள்ளவர்களுக்கு உணவிடும் வகையில் வாழ்வில் சம்பாதிக்க வேண்டும்
           7. முட்டையிலிருந்து வரும் குஞ்சுகளையும் மலரும் மொட்டுகளையும் நேரில் பார்க்க வேண்டும்.
           8 படி்த்தவை என்றும் மறக்காத நினைவாற்றல் வேண்டும்
           9. 64 கலைகளில் ஏதேனும் 4 கலைகளையாவது நிறைவாகக் கற்றுக்கொள்ள வேண்டும்
           10.தமிழ் பேசும் சமூகம் மூ்சசாய் சுவாசிக்கும் சமூகம் மீண்டும் செழிக்க வேண்டும்

           இவையே என் சின்ன ஆசைகள்...

8 கருத்துகள்:

  1. ஆறு மனம் ஆறு... சிறந்த மனம் ஆறு...

    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. ஆசைகள் நிறைவேற வாழ்த்துகள்மா.

    பதிலளிநீக்கு
  3. ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆசைகள்... உண்மையிலேயே தன்னிகரற்றவை என நினைக்கிறேன்..குறிப்பாக ஆறாவது ஆசை நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன் சகோதரி!!!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    வித்தியாசமான சிந்தனைகள்... வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. அடடா அத்தனையும் முத்தாக 9வது ஆசைக்கான முயற்சி நடந்து
    கொண்டுதானே இருக்கிறது வாழ்த்துகள்டா குட்டி.

    பதிலளிநீக்கு
  6. சின்னச் சின்ன ஆசைகள் அத்தனையும் நிறைவேற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு