மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 4 டிசம்பர், 2014

தவமாய் தவம்...

தவமாய் தவம்..

கண் செதுக்கிய  கற்பனை சிலையாய்
கரைந்து போனது காற்றோடு
நான் கண்ட கனவுகள்...
                                                             
.

மனம் பிரசவித்த அவனின் மாயபிம்பம்
மறைந்து போனது உயிர்மூச்சோடு...

அவன் நினைவுகளைச்
சுகமாகச் சுமக்கிறேன்!
கருவைச் சுமக்கும் தாயாய்....

சுற்றிவரும் பூமியைச்
சுட்டுவிரலால் சுண்டிவிடும் துணிவு
உன் நினைவுகள் தஞ்சமடைந்திருக்கும்
என் நெஞ்சத்திற்கு!

பால் பருகிய மிதப்பில்
மதிந்து வரும்..
வெண்ணிற வட்டக்காரிகை
வெட்டவெளியில்
கொட்டமடிக்கும்
நள்ளிரவின் பொழுதில்
இமையோர இம்சைக்குரியவனே!
 
உன்னை இமைக்காமல் ரசிக்க....
இளையவளின் இமையிரண்டும்
தவமிருக்கிறது
மூடிய நிலையில்!!!
                                             
                                                         

7 கருத்துகள்:

 1. வணக்கம் தோழி
  நல்லதொரு கருவைச் சுமந்த கவிதை. ரசிக்கும்படி உள்ளது. தொடருங்கள் வாழ்த்துக்கள் தோழி..

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  அள்ளி வீசிய வார்த்தைகள் எல்லாம் அழகிய கவியாக மலர்ந்த விதம் கண்டு
  உள்ளம் மகிழ்ந்தது... பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. மூடியிருக்கும் இமைகளை மனம் திறந்து ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 4. இந்தக் கவிதையை நினைக்கும் பொழுதெல்லாம் ஒரு புன்னகை வருகிறது..
  வாழ்த்துக்கள்
  தொடர்க

  பதிலளிநீக்கு