மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 30 செப்டம்பர், 2015

புதுக்கவிதைப்போட்டி  (பிரிவு 4)

பண்பாடு "பண் "பாடு 

நனி நாகரிகமென நழுவவிட்டுவிட்டோம்
நல்லதொரு பண்பாட்டை !



பொருளின் பின்னால் ஓடி
இருளில்  மாட்டிக்கொண்டோம் !
இளம் சமூகம் உணர மறுக்கிறது
இருதயமில்லா மிருகங்களாய்
இயங்குகிறோம் என்பதை!

பஃறுளி ஆறு பாய்ந்தோடிய
பண்பட்ட சமூகத்தை நோக்கி
படை திரட்டுவோம் வாரீர் !


முன்னேறிய உலகின்
விண்ணேறி  பாயும்  ஏவுகணையுடன்
தன்னேரில்லாத் தனித்தமிழனின்
பண்பாட்டை பறை சாற்றுவோம் வாரீர் !

யாதும் ஊரென்று முழங்கிய
பாரெல்லாம் வியந்திட விருந்தோம்பிய
வீரத் தமிழனை; ஈர நெஞ்சத்தனை
தோண்டி எடுத்திட தொடை தட்டி வாரீர்!

பாட்டி சொன்ன கதைகளை மறந்து !
வீட்டு முற்றத்து வண்ணக் கோலங்களை மறந்து !
வாசல் தோறும்  வாசம் செய்த சாணம் மறந்து !
பாட்டன் புகட்டிய அருமருந்துகளை மறந்து !
எட்டடுக்கு மாடிகளில் எதுவும் தெரியாத
விட்டில் பூச்சிகளாய் இருந்தது போதும் !
 பருந்தாய்  சிறகை விரி !
சிறுத்தையாய் சீறிப் பாய் !

உட்கார நேரமில்லை !
உலகம் காத்திருக்கிறது உனக்காக !

கன்னித் தமிழாள் இன்று
கணினித் தமிழாளாக  வளர்ந்தோங்கிவிட்டாள் !
வீண் பிதற்றல்களை வீசி எறிந்துவிட்டு
வீறு நடைபோடு !
எட்டுத்திக்கும் எடுத்துப்போக வேண்டும் !
 நம் தாத்தன் விட்டுச் சென்ற
பண்பாட்டை "பண் " பாட !!!!!!!!!



உறுதிமொழி:

இது எனது சொந்தப் படைப்பு என்று உறுதிகூறுகிறேன்.

மேற்கண்ட படைப்பு வலைப்பதிவர் திருவிழா - 2015” மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் -2015” க்காகவே எழுதப்பட்டது. இதற்கு முன் வெளியான படைப்பன்றுமுடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதிகூறுகிறேன்.
}

த. ரேவதி 





11 கருத்துகள்:

  1. அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  2. அட சூப்பரா இருக்கேடா..வாழ்த்துகள் போட்டியில் வெற்றி பெற..

    பதிலளிநீக்கு
  3. நன்று. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. கிடைத்தநேரத்தையும் நேர்த்தியாக பயன்படுத்தி ......ம்,ம் அருமையா
    இருக்குடா.வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. கன்னித் தமிழாள் இன்று
    கணினித் தமிழாளாக வளர்ந்தோங்கிவிட்டாள் !

    nice

    பதிலளிநீக்கு
  6. அழகான அருமையான கவிதை!
    வாழ்த்துக்கள்! நன்றி!!

    பதிலளிநீக்கு