மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 13 ஜூன், 2014

போகிறேன்.....

என் தாயின் வயற்றிலிருந்து
வெளியுலகைக் காண
ஆவலுடன் வந்த என்னை

ஆதரவாய்த் தாங்கிப் பிடித்த கரங்கள்...

என் பசி அறிந்து
எனக்கு ஊட்டி வளர்த்த கரங்கள்.......

ஆசை ஆசையாய் என்னை
அணைத்து வளர்த்த 
அன்புக் கரங்கள்  இன்று,
யாருக்கோ என்னை 
தாரை வார்க்கிறது....

என்னுடன் துள்ளி விளையாடிய 
ஜீவன்கள் .இன்று
சொல்ல முடியா சோகத்தில்!

நான் வளர்ந்த பருவத்தில்
என்னை பார்த்து ரசித்த  கண்களில்
வலிகளை சுமந்து கொண்டிருக்கும்
கண்ணீர்துளிகள் இன்று.....


யாருக்கும் விருப்பமில்லை
என்னை வழியனுப்பி வைக்க...
எனக்கும் விருப்பமில்லை
இந்த அன்பு நெஞ்சங்களை 
விட்டுப் பிரிய...


ஆனால் மகிழச்சியுடன் செல்கிறேன்
அடிமாடாய்
 ஒரு வேளை உணவாவது 
என்னால் என் குடும்பம் 
சாப்பிடும் என்பதால்......


                                                





12 கருத்துகள்:

  1. போகிறேன்.....என்ற தலைப்பில் அருமையான கவிதையை எழுதியுள்ளீர்கள் தோழி...போக மனமில்லாமல் போகிறேன் நானும் உங்களின் வலைதளத்தை விட்டு வெளியே....

    பதிலளிநீக்கு
  2. கவிதை இயல்பாயிருக்கிறது அம்மா. முதலில் திருமணமாகிப் போகும் பெண்ணின் சொல்லாய் எனக்குத் தோன்றிய கவிதையின் இறுதி வியப்பளிக்கிறது. வாயில்லா உயிரிகளின் துன்பம் களைய யாருளர் ?
    கலீல் இப்ரானின் கவிதை இப்படித்தான் . முதலில் வாசிக்கும் தளம் வேறு களமாகக் கொள்கையில் முடிவின் சொல்லாக்கத்தில் நம் தளத்தின் போக்கை மாற்றிவிடும் பாங்கு அவருக்கே உரித்தான உத்தி. மிக்க நன்றி அம்மா. சில பிழைகள் ( உணவாவது,தாங்கிப்) வளராமல் மாற்றிவிடுங்கள் அம்மா ! மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. தங்களின் வழிகாட்டுதலை மறவாமல் பின்பற்றுகிறேன் சார். பிழைகளுக்கு மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்.தங்கள் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகி உள்ளது!
    //http://blogintamil.blogspot.in/2014/07/welcome-and-farewel.html//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூவலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

    அறிமுகப்படுத்தியவர்-மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை


    பார்வையிட முகவரி-வலைச்சரம்

    -நன்றி-


    -அன்புடன்-


    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. மைதிலி டீச்சரம்மாவின் அறிமுகத்தால் இங்கு வந்தேன். அவரின் அறிமுகம் சோடைப் போகவில்லை. நான் படித்த உங்களின் இந்த முதல் பதிவே என் மனதை மிகவும் கவர்ந்தது. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவில் தங்களது பதிவு இடம் பெற்றதற்க்கு முதற்கண் வாழ்த்துக்கள் சகோதரி,,,, கவிதை திசைமா(ற்)றிய விதம் அருமை தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  8. இன்றைய வலைச்சரத்தில் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களது பதிவுகளை அவ்வப்போது படித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.com
    www.ponnibuddha.blogspot.in

    பதிலளிநீக்கு
  9. மனதை கிழித்த ஒரு பதிவு ! உண்மையிலேயே வளர்க்கும் மாட்டை அடிமாடுக்காக விற்பவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என நினைக்கின்ற போது வேதனை தான் மேலெழுகிறது. கணத்த மனதுடன் கூறுகிறேன் ! மிக அற்புதமான பதிவு ! வாழ்த்துகள் ! இனி தொடருவேன் !

    பதிலளிநீக்கு
  10. அட்டகாசமான கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு